கோப்புபடம் 
செய்திகள்

வலங்கைமான் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

வலங்கைமான் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வேப்பத்தாங்குடி மேலே தெருவை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது28). இவர் நேற்று முன்தினம் மாலை கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் கொட்டையூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கும்பகோணம் பகுதியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனிகுமார், படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் அங்கு சென்று பழனிகுமாரின் உடலை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.