விபத்து பலி 
செய்திகள்

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்:

வலங்கைமானை அடுத்த பூனாஇருப்பு ஊராட்சி பகுதியான மானாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 80). இவர் நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள வேடம்பூர்- ஆலங்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் வேடம்பூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் தனது மகன் ராமகிருஷ்ணனுடன் (20) மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். மோட்டார் சைக்கிளை ராமகிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT