மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவியேற்கும் வி.செந்தில்பாலாஜி
தமிழக அமைச்சராக பதவியேற்கும் வி.செந்தில்பாலாஜி 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.