தற்கொலை 
செய்திகள்

ஊத்தங்கரை அருகே தொழிலாளி தற்கொலை

ஊத்தங்கரை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

ஊத்தங்கரை தாலுகா எட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது 23). கூலித் தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.