நொறுக்கு தீனி 
செய்திகள்

தொலைக்காட்சிகளில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை விதித்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.

கடைகளில் வாங்கி சாப்பிடும் பார்சல் உணவுப்பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

அதில் சேர்க்கப்படும் சுவை கூட்டும் பொருட்களாலும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்களாலும் உடல் நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்துடன் பலருக்கு தேவையற்ற சதைகள் உருவாகி உடல் குண்டாகி விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் மிக அதிகமாகி விடுகிறது.

இதை தடுப்பதற்கு இங்கிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நொறுக்கு தீனி, பார்சல் உணவு பொருட்கள் போன்றவற்றின் விளம்பரங்கள் இங்கிலாந்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதையும் படியுங்கள்...உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.07 கோடியைக் கடந்தது

இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஏற்கனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்து இருந்தார். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.