தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய மீன்வளத்துறை மந்திரி திடீர் சந்திப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.