மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பாபுல் சுப்ரியோ 
செய்திகள்

மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு 2-வது முறையாக கொரோனா - மனைவிக்கும் தொற்று

மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். அங்கு நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் இவர் டோலிகங் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

மாலை மலர்

கொல்கத்தா:

மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். அங்கு நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் இவர் டோலிகங் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

அவர் போட்டியிடும் தொகுதிக்கு தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், பாபுல் சுப்ரியோவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதைப்போல பாபுல் சுப்ரியோவின் மனைவிக்கும் தற்போது முதல் முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களை பாபுல் சுப்ரியோ தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.

மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் சொந்த ஊரான அசன்சோலில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஓட்டுப்போட முடியாது என்பதை அவர் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.