உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் வானத்திரையான்பட்டிணம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 52), சிவக்குமார்(54) ஆகியோர் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.