இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் 
செய்திகள்

கூடங்குளம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

கூடங்குளம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகளை வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 30 கிலோ எடையுடைய 2 கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதை கண்ட மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதாகவும், ஆழ்கடலில் கப்பல் மோதி அடிபட்டு இவை உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.