கைது 
செய்திகள்

வலங்கைமான் அருகே இருதரப்பினர் இடையே மோதல்- 8 பேர் கைது

வலங்கைமான் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்று வருகின்றனர். இந்்த நிலையில் நாா்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் கொட்டையூரை சேர்ந்த விவசாயிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து கொட்டையூர் வடக்கு தெருவை சேர்ந்த தேவா என்பவரும், நாா்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த திலீபன் என்பவரும் தனிதனியாக வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொட்டையூர் வடக்கு தெருவை சேர்ந்த விஜய் (வயது 19), இளவரசன் (26), லெனின் (35), பகவத்சிங் (19), நாா்த்தாங்குடி பகுதியை சேர்ந்த ரகுபதி (27), சன்மானம் (22), இரணியன் (25), ரகுநாத் (25) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.