கோப்புப்படம் 
செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 25 பயங்கரவாதிகள் ஊடுருவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 25 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக எல்லைக் காவல் படை கூடுதல் பொது இயக்குனர் சுரேந்திர பன்வார் கூறி உள்ளார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி சதிச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 25 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எல்லைக் காவல் படை கூடுதல் பொது இயக்குனர் சுரேந்திர பன்வார் கூறி உள்ளார். இது கடந்த ஆண்டைவிட குறைவு என்று ஆறுதல்படுத்துகிறார் அவர். கடந்த ஆண்டில் 135 முதல் 140 பேர் ஊடுருவியதாக கூறுகிறார்.

இதுபோல 250 முதல் 300 பேர், இந்த பனிப்பொழிவுக்கு முன்பு ஊடுருவலுக்கு தயாராக இருப்பதாக புலனாய்வு அமைப்பு கூறி உள்ளதாகவும் அவர் அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டார். எப்படி இருந்தாலும் எந்தவொரு ஊடுருவலையும் முறியடிக்கும் அமைப்பு இந்திய ராணுவத்திடம் உள்ளது என்றார்.

இந்த ஆண்டு, பயங்கரவாதிகள் ஊடுருவலின்போது 3 ராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி கொல்லப்பட்டதாகவும், ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.