டி.டி.வி.தினகரன் 
செய்திகள்

வ.உ.சி. நினைவு நாள்: ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர்- டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு

நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப்பெருமகனாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரை வணங்கி போற்றுவோம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தியாக சீலர் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று.

ஆங்கிலேயரின் அடக்கு முறைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப் பெருமகனாக திகழ்ந்த வ.உ. சிதம்பரனாரை வணங்கி போற்றுவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.