கைது 
செய்திகள்

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய 3 பேர் கைது

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைக்கோட்டை:

திருச்சி கடைவீதி பகுதியில் உள்ள வடமாநில வியாபாரிகளை கடையை மூடச் சொல்லி மிரட்டியதாக கொடுத்த புகாரின் மீது கோட்டை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த வழக்கில் தொடர்புடையதாக திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ரியாஸ், தென்னூர் பகுதியை சேர்ந்த காஜாமைதீன், பாலக்கரை பகுதியை சேர்ந்த காஜாமொய்தீன் ஆகிய 3 பேரை நேற்று கோட்டை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT