மரணம் 
செய்திகள்

ரெயில் மோதி முதியவர் பலி

ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ஆறுகண் பாலம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயில் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.