நெல்லை:
சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் அனுமதியின்றி பேட்டரி பொருத்தப்பட்ட மீன்பாடி வாகனங்களை பயன்படுத்த கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றுள்ளேன்.
ஆனால் நெல்லை மாநகராட்சியில் எந்தவித பதிவும் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இது சட்ட விரோதமான செயல்.
எனவே சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஊழலை ஒழிக்க நல்லாட்சி இயக்கம் என்று ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளேன்.
மக்கள் என்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி உள்ளார்கள். எனவே நான் அங்கு நிச்சயம் போட்டியிடுவேன்.
அவ்வாறு அவர் கூறினார்.