டிராபிக் ராமசாமி 
செய்திகள்

டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த 4-ந்தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மாலை மலர்

சென்னை: 

சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த 4-ந்தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து டிராபிக் ராமசாமிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.