கோப்புபடம் 
செய்திகள்

குழித்துறை அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

குழித்துறை அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் சுந்தரதாஸ் (வயது 51). சுந்தரதாஸ் அந்தப் பகுதியில் உள்ள சூசைபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் கடையில் இருந்த போது விளக்கு ஒன்றை எரிய வைக்க முயன்றதாக ெதரிகிறது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரதாஸ் உடனடியாக குழித்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், சுந்தரதாஸ் சாவு குறித்து விசாரணை நடத்தினார்.