கோப்பு படம். 
செய்திகள்

திருக்கோவிலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து- டிரைவர் பலி

திருக்கோவிலூர் அருகே டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள மேலகொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் ஜெயபால்(வயது 26). டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வயலை விட்டு மேலே ஏற முயன்றார். 

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய ஜெயபால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.