சபாநாயகர் அப்பாவு 
செய்திகள்

சட்டசபை நூற்றாண்டு விழா- சபாநாயகர் இன்று மாலை டெல்லி செல்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நாளை மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

மாலை மலர்

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவையொட்டி தலைமை செயலகத்தில் வருகிற 2-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படுகிறது.

இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜனாதிபதியிடம் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை காலை 11.15 மணியளவில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்கிறார்.

பின்னர் நாளை மாலை 4 மணிக்கு விமானத்தில் அப்பாவு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் தேவை அதிகரிப்பு