நெல்லை:
நெல்லை டவுன் பாறையடியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது40), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீதாராமகிருஷ்ணன் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீதாராமகிருஷ்ணன் அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காளிமுத்து டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சீதாராமகிருஷ்ணனை கைது செய்தனர்.