திருமங்கலம்:
திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கற்களை உடைப்பதற்காக
அனுமதியின்றி வெடி மருந்துகளை வைத்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கொக்குளம் பரஞ்சோதி, அருப்புக்கோட்டை ராஜேந்திரன், திருமலை அழகுமலை,
மேலக்கோட்டை ஜெயசீலன் ஆகிய 4 பேரையும் கைது செய்து குவாரிகளில் இருந்த லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் அருகில் இருந்த மற்றொரு கல்குவாரியில் போலீசார் சோதனை செய்தபோது 17 டெட்டனேட்டர்கள், 23 வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், மற்றும் கொக்குளத்தைச் சேர்ந்த மீனா என்பவரையும் போலீசார் இந்திய வெடிமருந்து தடை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.