திருட்டு 
செய்திகள்

திருச்செங்கோட்டில் டயர் கடையில் திருட்டு

திருச்செங்கோட்டில் டயர் கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிப்பாளையம்:

திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழரசு (வயது 37). என்பவர் டயர் மற்றும் கார் சர்வீஸ் வாட்டர் வாஷ் கடையை நடத்தி வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, கணினி, மடிக்கணினி உள்பட பொருட்கள் மற்றும் ரூ.73 ஆயிரம் ரொக்கம் என சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து திருச்செங்கோடு டவுன் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT