விபத்து பலி 
செய்திகள்

திருச்செங்கோடு அருகே கார் மோதி கண்டக்டர் பலி

திருச்செங்கோடு அருகே கார் மோதி கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மல்லசமுத்திரம்:

திருச்செங்கோடு அருகே ஆன்றாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி . இவருடைய மகன் அஜய் (வயது 23). தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு சேலத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது தாலங்காடு பகுதியில் எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் அஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT