விபத்து பலி 
செய்திகள்

திருச்செங்கோடு அருகே விபத்தில் பெயிண்டர் பலி

திருச்செங்கோடு அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 28). பெயிண்டர். இவர் நேற்று குமரமங்கலம் பிரிவு ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சை முந்தி சென்றபோது நிலை தடுமாறி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.