மின்சாரம் நிறுத்தம் 
செய்திகள்

திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் கே.டி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்திற்குட்பட்ட கல்லாங்காடு நால்ரோடு, லட்சுமிநகர், அருள்ஜோதிநகர்,செந்தூரன் கார்டன், கிருஷ்ணாநகர் மற்றும் மேற்கு,அமராவதி நகர் கல்லாங்காடு 1 முதல் 6 வீதிகள்,வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.

இதேபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலக துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபம் மன்னாங்காடு பகுதியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT