கோப்புப்படம் 
செய்திகள்

கங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு - உத்தரபிரதேசத்தில் மீண்டும் சம்பவம்

மாநிலங்களில் ஏராளமான உடல்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கன்னாஜ்:

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கங்கையில் வீசும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அரங்கேறின.

இந்த மாநிலங்களில் ஏராளமான உடல்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினமும் 3 உடல்கள் கங்கை நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள கன்னாஜ்-கர்தோய் மாவட்ட எல்லைப்பகுதியான பத்னாபூர் காட்டில் இந்த உடல்கள் மிதந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.

ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் என மீட்கப்பட்ட அந்த 3 உடல்களும் கர்தோய் மாவட்டத்தை சேர்ந்தவை என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாவட்ட போலீசாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இந்த 3 உடல்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT