தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் 
செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் - கலெக்டர் தகவல்

கொரோனா தொற்று மீண்டும் தற்போது அதிகரித்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தென்காசி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று மீண்டும் தற்போது அதிகரித்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தென்காசி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் eregister.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.

7 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டும், மேலும் 7 நாட்களுக்கு தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த 14 நாட்களில் அவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுதிணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04633-290548, 1077-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை மூலம் சுழற்சி அடிப்படையில் ஆய்வக நுட்புனர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.