தூத்துக்குடி:
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் உமர் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலர் செய்யது உஸ்மான், செயலர்கள் மைதீன் கனி, அஜீஸ், வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலர் கிதர் பிஸ்மி, பேராசிரியை பாத்திமா பாபு உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.