ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

தொண்டி அருகே விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

டீசல் விலை உயர்வால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் செலவு அதிகமாகிறது. இதனால் இந்தப்பகுதி மீனவர்கள் விசை படகுகளில் கருப்பு கொடி ஏற்றி டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள சிங்காரவேலர் நகர், லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய கடலோர கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

சனி, திங்கள், புதன் ஆகிய நாட்களில் கடலுக்குச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் கரை திரும்புவார்கள்.

தற்போதைய டீசல் விலை உயர்வால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் செலவு அதிகமாகிறது. இதனால் இந்தப்பகுதி மீனவர்கள் விசை படகுகளில் கருப்பு கொடி ஏற்றி டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.