வழக்கு பதிவு 
செய்திகள்

தோகைமலை அருகே மது விற்ற பெண் மீது வழக்கு

தோகைமலை அருகே மது விற்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள கொசூர் கடைவீதியில் சிலர் மதுப்பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கொசூர் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கவுண்டம்பட்டியை சேர்ந்த கணேசன் மனைவி பழனியம்மாள் (வயது 37). தனது கடையில் வைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.