கோப்புப்படம் 
செய்திகள்

இதை செய்தால் தொற்று இருப்பதை கண்டறிய முடியும் - வைரல் தகவலை நம்பாதீங்க

கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என கண்டறிய இதை செய்யுங்கள் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என கண்டறிய இதை செய்தாலே போதும் என கூறும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவில், `பயனர்கள் 20 நொடிக்கும் மேல் தங்களின் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் மூச்சை இழுத்துப்பிடிக்க முடிந்தால், அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை'. என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஒருவர் பத்து நொடிகள் அல்லது அதற்கும் மேல் எவ்வித சிரமும் இன்றி மூச்சை இழுத்துப்பிடிக்க முடிந்தால் அவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்படவில்லை என கூறிவிட முடியாது என உலக சுகாதாரம் மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் முதல் அலை காலக்கட்டத்திலும் இதேபோன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வகையில் தற்போதும் இது வைரலாகி இருக்கிறது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.