வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட் 
செய்திகள்

பிஎஸ்பி முன்னாள் எம்பி என கூறி வைரலாகும் வீடியோ

போலீஸ் என்கவுண்டருக்கு பயந்து ஒருவர் சரணடைவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வல்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

போலீஸ் அதிகாரிகள் முன் நபர் ஒருவர் அழுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்றும், அதில் அழுவது பிஎஸ்பி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. போலீசார் அவரை என்கவுண்டரில் கொல்ல முயற்சிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

வைரல் வீடியோ, அவர் பிச்சைக்காரர் இல்லை பிஎஸ்பி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ஆவார். அவரை பிடித்து கொடுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அவர் உத்தர பிரதேச காவல் துறையிடம் இப்படி சரணடைந்தார் எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. 

வீடியோவை ஆய்வு செய்த போது, அதில் இருப்பவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவுடி நயிம் என தெரியவந்தது. மேலும் என்கவுண்டருக்கு பயந்து அவர் சம்பல் பகுதி காவல் துறையினரிடம் சரணடைந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வகையில் வீடியோவில் இருப்பது பிஎஸ்பி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.