விபத்து பலி 
செய்திகள்

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேலமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது62). இவர் சம்பவத்தன்று திருவோணம்- கறம்பக்குடி சாலையில் மேலமேட்டுப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் மூணுமாங்கொல்லை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.