பூதலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில் பொது வெளியில் முககவசம் அணிந்து வரவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், சுகாதார ஆய்வாளர் தேன்மொழி மற்றும் பணியாளர்கள் திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலை அருகிலும், புதுச்சத்திரம் சாலை சந்திப்பிலும் நின்று அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
மேலும் 26 நபர்களிடம் தலா ரூ.200 வீதம் ரூ.5,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.