மரணம் 
செய்திகள்

திருக்கனூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி

திருக்கனூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராமையா (வயது 57) கூலித் தொழிலாளி. தமிழக பகுதியான மதுரப்பாக்கத்தில் இருந்து திருக்கனூர் ஏரிக்கு வரும் வாய்க்காலில் கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பு அருகே நேற்று மதியம் கால் கழுவ சென்றபோது, தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் பிணமாக கிடந்த ராமையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT