திருப்பரங்குன்றம்:
மதுரை திருநகர் சவுபாக்கிய நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், குத்து விளக்குகள், அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலமாரியில் இருந்த ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய கிஷோர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.