க.பரமத்தி:
தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டி கரைத்தோட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது தோட்டத்தில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பவர் கள் இறக்கி விற்பதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கள் இறக்கி விற்றுக் கொண்டிருந்த ஆறுமுகத்தை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கள்ளை பறிமுதல் செய்து அழித்தனர்.