கோப்பு படம். 
செய்திகள்

மன்னார்குடியில் நூதன முறையில் முதியவரிடம் மோதிரம் திருட்டு

மன்னார்குடியில் நூதன முறையில் முதியவரிடம் மோதிரத்தை திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மாலை மலர்

மன்னார்குடி:

மன்னார்குடி உடையார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 75). இவர் நேற்று மன்னார்குடி புதுத்தெருவில் நண்பரிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என்று பேசி கொண்டு இருந்தார். அப்போது அருகில் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அருகில் வீடு வாடகைக்கு இருப்பதாகவும், வந்தால் காட்டுவதாகவும் கோவிந்தராஜிடம் கூறியுள்ளார். அதை நம்பிய அவர் வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அருகில் உள்ள தெருவிற்கு சென்று ஒரு வீட்டின் முன்பு இதுதான் வீடு என்று கூறியுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய கோவிந்தராஜிடம் நீங்கள் அணிந்திருக்கும் மோதிரம் மிக அழகாக உள்ளது எங்கு வாங்கியது அதை காட்டுங்கள் பார்க்கலாம் என வாலிபர் கூறினார். அதை நம்பிய கோவிந்தராஜ் மோதிரத்தை கழட்டி வாலிபரிடம் கொடுத்துள்ளார். உடனே வாலிபர் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே போய் பாருங்கள் என கூறியுள்ளார். உடனே கோவிந்தராஜ் வீட்டின் கேட்டை திறக்க சென்றபோது, வாலிபர் மோதிரத்துடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து கோவிந்தராஜ் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நூதன முறையில் முதியவரிடம் மோதிரத்தை திருடி சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.