விபத்து பலி 
செய்திகள்

தாரமங்கலம் அருகே கார் மோதி் மளிகை கடை உரிமையாளர் பலி

தாரமங்கலம் அருகே கார் மோதி் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அசுரப் அலி (வயது 49). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு நூருஸ் ஹீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். அசுரப் அலி நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் அசுரப் அலி் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.