மணல் கடத்தல் 
செய்திகள்

தஞ்சை அருகே மணல் கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்

தஞ்சை அருகே மணல் கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் வெண்ணாற்று பகுதியில் இரவு கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.அப்போது வெண்ணாற்றங் கரையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது.

போலீசாரை பார்த்ததும் லோடு ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT