தம்பிதுரை 
செய்திகள்

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்- மேல்சபையில் தம்பிதுரை வலியுறுத்தல்

இலங்கையின் மனித உரிமை மீறல் போர்க்குற்றத்தை எதிர்த்து இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.

போர் விதிமுறைகளை மீறி அத்துமீறலில் இலங்கை அரசு ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் இங்கிலாந்து தீர்மானம் கொண்டு வந்தது.

ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தினார். இதுதொடர்பாக பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியதாவது:-

இலங்கையில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். இலங்கையின் மனித உரிமை மீறல் போர்க்குற்றத்தை எதிர்த்து இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என்று கூறினார். மோடி உறுதி அளித்தபடி இந்திய அரசு செயல்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.