கோப்புப்படம் - முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி 
செய்திகள்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஒரு மாதத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இருகட்சிகளுக்கும் இடையே அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் மோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல்-அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ரங்கசாமியின் உடல் நலம் குறித்தும் அவர் விசாரித்தார். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மோடி பேசியதாகவும் தெரிகிறது.

SCROLL FOR NEXT