கோப்பு படம். 
செய்திகள்

குளியல் அறையில் தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி

துடியலூரில் குளியல் அறையில் தவறி விழுந்த டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

சிவகங்கையை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 45). டீ மாஸ்டர். கோவை வந்த இவர் துடியலூரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 2 மாதங்களாக டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தான் தங்கி இருக்கும் அறையில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்தோணிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.