தற்கொலை 
செய்திகள்

மனைவி பிரிந்ததால் விஷம் குடித்து டெய்லர் தற்கொலை

அரக்கோணம் அருகே மனைவி பிரிந்ததால் மனமுடைந்த டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த முள்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ராவ் (வயது 52). டெய்லர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவ்வபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் ராவின் மனைவி குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ் ராவ் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.