சுஷில் சந்திரா 
செய்திகள்

தலைமை தேர்தல் கமி‌ஷனராக பதவியேற்றார் சுஷில் சந்திரா

புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுனில் அரோரா இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் நாளை முடிவடைகிறது.

இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுஷில் சந்திரா தற்போது தேர்தல் கமி‌ஷனர் பதவியில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் கமி‌ஷனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இது அவருடைய பதவிக்காலத்தில் முக்கிய தேர்தல்களாக அமையும்.

சுஷில் சந்திரா ஐ.ஆர்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு பணிக்கு வந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், மத்திய நேரடி வரித்துறை சேர்மனாகவும் இருந்துள்ளார்.

SCROLL FOR NEXT