மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

சுல்தான்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சுல்தான்பேட்டை:

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள சின்ன வதம்பச்சேரியை சேர்ந்தவர் பொன்னுசாமி. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருடைய மனைவி ஈஸ்வரி(வயது 56). இவர் நேற்று காலை தனது வீட்டில் கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைத்துக்கொண்டு இருந்தார், அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.