மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே குலசேகரன்புதூர் சமத்துவபுரம் நெய்தல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் உமா மகேஸ்வரி (வயது 20), பி.எஸ்சி படித்து வந்தார்.
விஜயகுமார் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இதனால் உமா மகேஸ்வரி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். தந்தை இறந்த துக்கம்
அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் குடும்பத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல உமா மகேஸ்வரி தூங்க சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் உமா மகேஸ்வரியின் தாயார் அவரது
அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது உமா மகேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து உமா மகேஸ்வரியின் சகோதரர் சுரேஷ் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்
ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.