டிடிவி தினகரன் 
செய்திகள்

சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளை போற்றுவோம்- டிடிவி தினகரன் டுவிட் பதிவு

தமிழர்களையும், நம் தமிழக மண்ணையும் மனதார நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளை போற்றி வணங்குவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரத்திருமகன், தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்த தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் இன்று.

“இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று அறிவித்து தமிழர்களையும், நம் தமிழக மண்ணையும் மனதார நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளை போற்றி வணங்குவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.