மதுரை:
மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகன் குணா சூரியஹாசன் (வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று காலை வீட்டை விட்டு சென்ற அவன் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவன் நண்பர்களுடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிக்க சென்றது தெரிய வந்தது. அங்கு குளித்து கொண்டிருந்த போது குணா சூரியஹாசன் நீரில் மூழ்கி பலியானதும் தெரிய வந்தது.
மறுநாள் காலை அவனது உடல் ஆற்றில் மிதந்தது. கரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று குணா சூரியஹாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.