அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அத்கான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். அங்கு பானிபூரி, சாட், வடபாவ், பாவ்பாஜி உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் அந்த உணவுகளை மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். அடுப்பில் பானிபூரிக்கான மசாலா தயாராகிக் கொண்டு இருந்தது.
அதில் தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக அங்கிருந்த பாத்திரத்தில் சிறுநீரை பிடித்து அதை அதில் ஊற்றி சமைத்தார். பின்னர் அந்த பாத்திரத்தை கழுவாமலேயே உணவுப் பொருட்களையும் அதில் போட்டு பரிமாறினார்.
இதை யாரோ மறைந்து இருந்து வீடியோ எடுத்தனர். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். 20 வினாடி ஓடும் அந்த வீடியோ பரபரப்பாக பரவியது.
2017-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள சேட்டன் நாஞ்சியில் ஒருவர் பானிபூரியில் சிறுநீரை கலந்ததால் அதற்காக அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மும்பை கொல்காபூரில் பானிபூரி கடைக்காரர் கழிவறை தண்ணீரை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தடுப்பூசி போட ‘வாட்ஸ் அப்’பில் முன்பதிவு: மத்திய அரசு ஏற்பாடு